top of page

”You’ve have got to work with your mistakes,until they look intended.understand?”

-Raymond Carver

 

 

1. நியுயார்க் டைம்ஸ் இதழுக்காக எழுதிய கட்டுரையில் “too tedious to talk about here” கதை குறித்த தகவல்களை குறிப்பிட்டிருந்தீர்கள்.அது பற்றி?

 

ஆம்.அந்த கட்டுரையில் நிறைய கசப்பான விஷயங்களை பேச வேண்டியிருந்தது”Anteus” இதழில் Fires என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் இதை குறித்து விரிவாக பதிவு செய்திருக்கிறேன்.அதன் இறுதியில் பதிவு செய்த ஒன்றை சொல்ல வேண்டும்.ஒரு எழுத்தாளன் தன் எழுத்தால் மதிப்பீடு செய்யப்படுகிறான்.யாரும் என்னை எழுத்தாளனாக சொல்லவில்லை.தனிப்பட்ட சூழ்நிலைகளை வைத்து எழுதுவது வேறுவிதமானது.

மேலும் அன்றாட வாழ்க்கை நகர்வுகளுக்கு மத்தியில் எழுத்து வேலையை செய்வது கடினமாக இருந்தது.நீண்ட காலம் பணியாற்ற வேண்டுமென்பதாலே நாவல் எழுதவில்லை. எழுத்தோடு விரைவான ஊதியம் பெறுவதற்காக கதை மற்றும் கட்டுரைகளை எழுதினேன்.எனினும் கடுமையான வேலை செய்தே அன்றாட வாழ்க்கை நகர்ந்தது.மன உளைச்சலினால் அதிகம் குடிக்கத் தொடங்கினேன்.இதனைப் பற்றி தான் ” too tedious to talk about here” –கதையில் பகிர்ந்து கொண்டேன்

 

2. குடிப்பழக்கத்தை எவ்வாறு கைவீட்டிர்கள்? எப்படி அது நிகழ்ந்தது?

 

1977-ல் சில மாதங்களை மருத்துவமனையில் கழித்த பின்னர் கலிப்ஃபோர்னியாவின் Devoit மது தீர்வு மையத்தில் சில மாதங்கள் இணைந்தேன்.மது பழக்கத்தைக் கைவிடும் பொருட்டு முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் முழுமையாக விடை காண நேரம் எடுத்தது.தலை வலியும் விடாமல் இருந்தது.

 

கலிப்ஃபோர்னியாவில் வசித்த போது Mc.GrawHill என்ற மூத்த பத்திரிக்கையாளரை சந்தித்தேன் அவர் நாவல் எழுதவதற்கான பணமும் கொடுத்து மதிய உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.பின் நண்பர்களுடனான பார்ட்டிகளில் குடித்தேன்.இதனால் தலைவலியும் அதிகமாக இருந்தது. சில நாட்கள் குடிக்காமல் இருந்தது உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தியிருந்தாலும் அப்பழக்கத்தை மெல்ல மெல்ல கைவிட்டேன்.ஆனால் நாவல் எழுத முயன்றும் இயலவில்லை.

 

3. உங்கள் கதை உருவாக்கத்தின் தொடக்கம் எங்கு அமைகிறது.குறிப்பாக மது மையாகக் கொண்ட கதைகள்?

 

நான் எழுதும் புனைவு கதைகளில் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளின் தன்மையும் இணைந்திருக்கும்.கதைகளின் சில விடயங்கள் எனக்கு நேர்ந்த அனுபவங்களாக அமைந்திருக்கிறது.இப்படி உருவானது தான்( a serious talk) மேலும் Issac Babel,Hemingway, Baray Hanah,Richard ford,anton Chekov,Tolstoy- போன்றோரின் படைப்புகள் சில சுயசரிதைகளாக தோன்றுவதுண்டு.கதைகளில் பெரிதாகவோ,சிறியதாகவோ இருந்தாலும் மெல்லிய காற்றாக மட்டும் அவை உருவெடுப்பதில்லை.நான் எழுதிய சில படைப்புகளும் சுயசரிதைகளாய் தோன்றியதில் எனக்கு கவலையில்லை.கற்பனைத்திறன் கொண்ட தனித்தன்மையான எழுத்து எந்த ஒரு எழுத்தாளனுக்கும் அவசியமானது.பக்கம் பக்கமாக நம் வாழ்க்கைக் கதை எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை

 

4. உங்கள் கதாபாத்திரங்கள் அதற்குரிய நோக்கத்தை அடைகிறதா?

 

ஆம்.முயன்று கொண்டிருக்கிறது.ஆனால் முயல்வதும் கண்டடைவதும் வேறு..சிலரது வாழ்க்கையில் அது நடக்கிறது.ஆனால் சில மனிதர்கள் அதை நோக்கி நகரவில்லை.இப்படி தான் நினைத்ததை செய்ய இயலாமல் மன உளைச்சலால் பீடிக்கப்பட்டவர்களை குறித்துச் சொல்லும் போது என்னுடைய அனுபவங்களையும்,சூழலையும் ஒருங்கே எடுத்துரைக்கும் படைப்புகளையே நான் செய்கிறேன்.என் கதைமாந்தர்கள் வாழ்க்கையைப் புரிந்து கொண்டும் அதை நோக்கி செல்ல முயலாவிட்டாலும் அவர்களால் இயன்ற இடத்தை அடைந்து வெற்றிக் காண்கின்றனர்

 

5. எழுதுவதை செப்பனிடுவீர்களா?

 

ஆம்.நிறைய செய்திருக்கிறேன்.அது எனக்கு பிடித்தமான ஒன்றும் கூட.விரிவாக எழுதப்பட்ட கதைகளில் அதிகப்படியான  வார்த்தைப் பிரயோகங்களை செய்து பார்த்துள்ளேன்.

 

6. நீங்கள்  வியக்கும் படைப்பாளிகள் குறித்து

 

Hemingway-ன் படைப்புகளுக்கு பின் செகாவின் நாடகங்களை விட சிறுகதைகள் என்னை கவர்ந்திருக்கின்றன.அவரது கதைகள் மாற்றுவழியில் சிந்திக்கத் தூண்டும்.பிறகு டால்ஸ்டாய்.மேலும் பல எழுத்தாளர்கள் குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாக வாசித்து வரும்(Tobias Wolff).அவரது புத்தகம்(the Garden of the North American Martyrs )மிகவும் அற்புதம்! செகாவிற்கு பிறகு மார்க்சிம் கார்க்கியின் கதைகள் அவரது படைப்புச்சாயலை உணர்த்தின.ரிச்சர்டு ஃபோர்டு எனது நல்ல நண்பர், எனக்கு பிடித்த நாவலாசிரியரும் கூட..இதை போன்று எழுத்துலகில் நிறைய நண்பர்களும் இருக்கிறார்கள்.

 

7. தற்போது கவிதை எழுதும் எண்ணம் இருக்கிறதா?

 

நிச்சயமாக.வெகுகாலம் சென்ற பிறகு நாம் கவிதைகள் எழுதுவதில்லையே என்ற ஐயம் தோன்றுகிறது.அதற்காகவே அதிகம் எழுத முயல்கிறேன்.விரைவில் வெளியாகவிருக்கும்”FIRES” புத்தகத்தில் எனது அத்துனை கவிதைகளும் இடம்பெறும்.

 

8. உங்களது புனைவு படைப்புகளும்,கவிதைகளும் எவ்வாறு ஒன்றோறொன்று இயங்குகின்றன?

 

பெரிதாக ஒன்றும் இல்லை.எனக்கு இரண்டிலுமே ஈடுபாடு இருந்தது.நாளிதழ்களில் பெரும்பாலும் கவிதைகள் தான் எழுதியிருக்கிறேன்.ஒன்று மட்டும் சொல்வதானால் புனைவுகளே எனக்கு சரியான களம். நான் பிறப்பிலேயே கவிஞன் இல்லை.ஆனால் சமயத்தில் எழுதும் கவிஞன்.அதுவே திருப்தியாக உள்ளது

 

தமிழில்: அபிநயா

abisurya4@gmail.com

bottom of page