top of page

He should be grateful. That way he won’t have to listen to all the bullshit

 

மேற்கண்ட quote, காது கேட்காத வயதான நபரிடம் ‘உங்களுக்கு ஏதாவது வேணுமா’ எனச் சத்தமாக கேட்டுவிட்டு ‘பாவம் மனுஷன். காது சுத்தமா கேட்கறதில்ல’ என நகரும் bartender பெண்ணிடம் பாரின் மற்றொரு மூலையில் அமர்ந்திருக்கும் நபர் சொல்வது.

 

a) “trilogy about being a human being” வரிசையில் Roy Andersson இயக்கியிருக்கும் மூன்றாவது படம் தான் இந்த En duva satt på en gren och funderade på tillvaron. அதாவது ஆங்கிலத்தில் A Pigeon Sat on a Branch Reflecting on Existence. இப்படம் நடந்து முடிந்த 71ஆவது  வெனிஸ் திரைப்பட விழாவில் ‘Golden Lion’ விருதினைப் பெற்றிருக்கிறது.

 

b) படத்தின் தலைப்பே எவ்வளவு கவித்துவமாக இருக்கிறது எனப் பாருங்கள். அந்தத் தலைப்பிற்கான reference என்று ஒரு ஓவியத்தினைப் பற்றிக் குறிப்பிடுகிறார் Roy Andersson.

 

* Its title is a reference to the 1565 painting ‘The Hunters in the Snow’ by Pieter Bruegel the Elder. The painting depicts a rural wintertime scene, with some birds perched on tree branches. Andersson said he imagined that the birds in the scene are watching the people below and wonder what they are doing. He explained the title of the film as a “different way of saying ‘what are we actually doing’, that’s what the movie is about.”


**இந்தப்படத்திற்கு 1948ம் ஆண்டு வெளியான Vittorio De Sicaவின் Bicycle Thieves படத்திலிருந்து பெற்ற உந்துதல் தான் காரணம் என்கிறார், Roy Andersson. இத்தாலிய நியோ ரியலிச படங்களில் அதி உச்ச பாய்ச்சலை நிகழ்த்திய படமான Bicycle Thieves அனைவராஆஆஆலும் பார்க்கப்பட்டு டொரண்ட்களில் seeds இன்றி டொக்காகியிருக்கும் என நம்புகிறேன். அந்தப் படத்திலிருந்து உந்துதல் பெற்றிருக்கிறார் எனும்போது எப்படிப்பட்ட நடிகர்கள், லோகேசன்கள், கேமரா கோணங்கள் போன்றவைகளை பயன்படுத்தியிருப்பார் & கதையின் அடிநாதமாக எந்த ‘விடயத்தினைக்’ கையாண்டிருப்பார் என நீங்களே யோசித்துப்பாருங்கள். Bicycle Thieves படத்தில் தொழில்முறை நடிகர்கள் பயன்படுத்தப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல தனது படத்திற்கும் தொழில்முறை நடிகரல்லாத மனிதர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.

 

மரணம் 1: பீர் பாட்டிலின் மூடியைத் திறக்க முயற்சிக்கும் வயதான நபர்.மார் வலி வந்து மரணிக்கிறார். fade out.

 

மரணம் 2: இறக்கும் தருவாயில் இருக்கும் மூதாட்டி சொர்கத்திற்குப் போகும் போது தன்னுடனேயே எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும் என கையில் ஒரு பையை (bag) பிடித்துக் கொண்டே படுத்திருக்கிறார். அந்த பையை அவர் தன மகளிடம் கேட்டு வாங்கியிருப்பார். உள்ளே என்ன இருக்கிறது என்பது பார்வையாளர்களுக்குச் சொல்லப்படவில்லை. அதில் நகை, பணம் போன்றவை இருக்கலாம் எனக் கருதும் அம்மூதாட்டியின் மகன்கள் இருவர் ‘சொர்கத்திற்க்குச் செல்கையில் இவ்வாறு பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது’ என்று கூறி அதனை அபகரிக்க முயல்கின்றனர். ஆனால் அந்த வலிய மூதாட்டியோ தனது பிடியை விடவில்லை. fade out.

 

மரணம் 3: கப்பல். பயணிகள் உணவகம். கீழே ஒருவர் விழுந்து கிடக்கிறார்.. ஒரு மேலதிகாரி நின்று கொண்டிருக்க கீழே இரண்டு பேர் விழுந்து கிடப்பவரின் உடலை ஆராய்கின்றனர். அதிகாரிகள் அவரைப் பரிசோத்தித்து விட்டு அவர் இறந்து விட்டார் என்கின்றனர். உணவகமே ஆர்வமுடன் இதனைக் கவனிக்கிறது. அப்போது அந்த உணவகத்தின் பொறுப்பிலிருக்கும் பெண்மணி “இவர் ஆர்டர் செய்திருந்த உணவை என்ன செய்வது? (அந்த நபர் ஆர்டர் செய்திருந்த உணவு = சான்ட்விச் + பியர்) ஏற்கனவே அதற்கான தொகையினையும் செலுத்திவிட்டார்” என்கிறார். அதற்கு மேலதிகாரி. “அற்புதமான கேள்வி . ஏற்கனவே விற்கப்பட்ட உணவினை இன்னொரு முறை நாம் விற்க இயலாது. எனவே அதனை இங்கு எவருக்காவது இனாமாகக் கொடுத்து விடுங்கள்” என்கிறார். அங்கு உணவருந்திக்கொண்டிருக்கும் பயணியொருவர் பியரினை மட்டும் வந்து எடுத்துக் கொள்கிறார்

 

c) Pan, tilt, zoom in, zoom out என்று எந்தவிதமான கேமரா அசைவுகளும் இல்லாமல் இந்தப் படத்தின் காட்சிகள் அனைத்தும் static shotகளாக மட்டும் எடுக்கப்பட்டிருக்கின்றன. அற்புதமான + தூய்மையான இடங்கள் மட்டுமே படத்தில் வருகின்றன. ஒரு விதமானா ‘தொந்தரவு மனநிலைக்கு’ இந்த அதி தூய்மை வலுசேர்க்கிறது. ஒரே இசைக் குறிப்பு தான் படம் நெடுக.

 

d)

1. நகரில் உள்ள பிரதான பாருக்கு வயதான மனிதர் ஒருவர் தொடர்ந்து 60 வருடங்களாக வந்து கொண்டிருப்பார். தற்போது அவருக்கு காது கேட்பதில்லை. எதனையும் சத்தமாக காதருகே சென்று  கூறினால் தான் விளங்கிக்கொண்டு மறுமொழி வரும். அவரிடமிருந்து பின்னோக்கி நகரும் கதை அற்புதமான அனுபவம் தரும். 1943 இல் நடக்கும் அந்த flashback காட்சிகள் நான் மிக ரசித்த பகுதிகளில் முதன்மையானது.

 

2. ஹோமோ செபியன்ஸ் ஆராய்ச்சிக்குக் கொண்டுவரபட்டிருக்கும் குரங்கின் இயலாமை பயம் ஆகியவற்றின் வெளிப்பாடாக வரும் கத்தலை யாரும் கேட்பதில்லை.

 

3. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியில் பங்குபெற நகரம் வந்திருக்கும் பிரமுகர் ஒருவர் தாமதமாக வந்து சேர்கிறார். அவருக்குக் கிடைக்கப்பெற்ற தவறான தகவலால் நகரத்தினுள் அலைகிறார். திரும்பிச் செல்லவேண்டிய பேருந்தினையும் தவறவிடுகிறார்.

 

4. முன்னொரு காலத்தில் கப்பலின் கேப்டனாகாச் செயல்பட்டவர் தற்சமயம் சலூன் வைத்து நடத்துகிறார். துரதிஷ்டவசமாக அவரது சுயவரலாரைக் கேட்கவும் ஆட்களில்லை.

 

5. — go and watch —

 

6. — go and watch —

 

7. — go and watch —

 

8. — go and watch —

 

9. — go and watch —

 

10. — go and watch —

 

e) மக்களை மகிழ்விக்க சில பொருட்களை தங்கள் பெட்டிகளுக்குள் வைத்துக் கொண்டு அந்த நகரம் வருகின்றனர் இரண்டு பேர். இரண்டு பேருக்கும் நேரெதிரான குணநலன்கள். ஒருவர் “bully”, மற்றவர் “cry baby”. அவர்கள் வைத்திருக்கும் பெட்டியினில் vampire teeth with extra long fangs, laugh bag, uncle one-tooth etc.  அவர்கள் ஊடாகவே நகரத்தின் மற்ற மூலை முடுக்குகளில் அடைந்திருக்கும் மனிதர்களின் நிலை சொல்லப்படுகிறது.

 

f) முழுக்க முழுக்க நகரத்தின் உதிரி மனிதர்களின் இருத்தலியல் பிரச்சினைகள், இருப்பிடமற்றவர்கள், பணமில்லாதவர்கள், வறுமையில் வாடுபவர்கள், வெறுப்பை உமிழும் + சுரண்டிப்பிளைக்கும் கொடூர மன முதலாளிகள் போன்றோர்களின் செயல்பாடுகளை & அன்றாட நிமித்தங்களை அபத்த நகைச்சுவையாக கொஞ்சம் சர்ரியலிச முலாம் பூசப்பட்டு திரைப்படமாக்கியிருக்கிறார் Roy Andersson. ஒரு சினிமா ரசிகனாக நான் “satisfied fully satisfied” என்று எனக்கு நானே சொல்லிக் கொண்ட படங்களில் இதுவும் ஒன்று.

 

g) திரைப்படம் என்பதனையும் தாண்டி நம் மனதினை நோக்கி ரகசியமாகச் சில கேள்விகளை முன்வைக்கிறது இந்தத் திரைப்படம்.

 

அடிக்குறிப்புகள்:

 

1. * & ** கட்டற்ற களஞ்சியத்திலிருந்து.

 

2. கட்டுரையின் தொடக்கத்தில் இருந்த முதல் பாராவை cut செய்து இங்கு paste செய்கிறேன்: ஒரு மகத்தான படத்தினைப் பார்த்த கையோடு (அல்லது  கண்ணோடு) அதனைப் பற்றிய சிறிய அறிமுகக்குறிப்பை அல்லது குறிப்பாக நினைத்து அபத்தமாக எதனையோ ஒன்றை எழுத விழைகிறேன்.

 

3. இதனை நண்பர்களுக்குப் பரிந்துரைக்கக் கொஞ்சம் பயமாகத்தான் உள்ளது. (மனசாட்சி: பரிந்துரை செய்யும் அளவிற்குப் பெரிய புடுங்காமட்டை ஆகிவிட்டாயா. ஆனானப்பட்ட தகேஷி கிடானோ என்ன சொல்கிறார் எனத் தெரியுமல்ல. அவரது நேர்காணலை படித்துவிட்டுமா இது போன்ற ‘ஆசிரியர்’ ரோல் ப்ளே செய்கிறாய்) ஏனெனில் melo dramaவில் கூட ‘பர பர’ ‘ஜெட் வேக’ திரைக்கதை எதிர்பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். Impact of கொரியன் க்ரைம் திரைப்படங்கள். வேறொன்றுமில்லை. contemporary world cinema திரைக்கதை அமைப்பிலும் கதை சொல்லும் பாணியிலும் வேறொரு கட்டத்தினை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டது. அதற்குத் தகுந்தாற் போல நம்மை மாற்றிக்கொள்ள ஒரே வழி சமகாலத்திய உலக சினிமாக்களைத் தொடர்ந்து பார்ப்பதே.

 

4. இது ஒரு தொழில்முறை விமர்சக வல்லுனரின் குறிப்பு: http://www.theguardian.com/film/2015/apr/23/a-pigeon-sat-on-a-branch-reflecting-on-existence-review (இதில் இருக்கும் முதல் வீடியோவில் இயக்குனர் Roy Andersson சில முக்கியமான விவரங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்)

 

5. இடுகையின் தலைப்பு நகைச்சுவையாக இருந்ததா.? ம். நன்றி. நகைச்சுவைக்காக வைத்ததுதான்.

யமுனை செல்வன்

yamunaiselvan@gmail.com

bottom of page